Advertisment

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த அருண் விஜய்

Arun Vijay donates blood

Advertisment

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள்இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போதுஅவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் மாபெரும் இரத்ததான முகாமை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் 40-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். ரசிகர்களின் இந்த இரத்த தானம் முகாமினை கேள்விப்பட்டு நடிகர் அருண் விஜய் நேரில் சென்று தானும் இரத்த தானம் செய்துள்ளார்.

arun vijay arun vijay birthday
இதையும் படியுங்கள்
Subscribe