/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arun-vijay_6.jpg)
அருண் விஜய், தடம் படத்தை தொடர்ந்து நடிக்க இருக்கும் படங்களின் அறிவிப்புகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா என்றொரு படத்தில் நடித்தார் அருண் விஜய்.
தடம் படத்திற்கு முன்பே பாக்ஸர் என்றொரு படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தடம் படம் வெளியானவுடன் அதில் நடிக்க தொடங்கினார். இதற்காக இந்தோனேசியா சென்று தற்காப்பு கலையை பயின்று நடிக்க திட்டமிட்டார். இவருடன் ரித்விகா சிங்கும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் விவேக் இயக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து அருண் விஜய் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னிடம் நிறைய பேர் பாக்ஸர் படம் குறித்து ஆவலாக கேட்கிறார்கள். நானும் உங்களை போல சமமாக அந்த படத்தின் மீது ஆவலாக உள்ளேன். அந்த படத்திற்காக நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த படத்திற்கு தேவைப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் சரியான கிளாரிட்டி இருந்தால் மட்டுமே சரியான கால நேரத்தில் அந்த படத்திற்காக பணிபுரிய முடியும். அதனால் என்னுடைய படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டிற்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாக்ஸர் பட கெட்டப்பிலிருந்து புகைப்படம் ஒன்றையும் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)