Advertisment

உளவு அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Border

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கெசண்ட்ரா, ஸ்டீபி பட்டேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. குற்றம் 23 பட வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் உளவு அதிகாரியாக நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Advertisment

கடந்த வாரம் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத்தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதம் 19ஆம் தேதி பார்டர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisment

arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe