/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/91_8.jpg)
‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அறிவழகன், தற்போது அருண் விஜய்யை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டீபி படேல் நடிக்கிறார். நடிகை ரெஜினா கெசன்ட்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று (14.04.2021) இரவு நடைபெற்றது. பிரபல தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில், படத்திற்கு 'பார்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய் உளவாளியாக நடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அக்கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வெளியாகியுள்ள மிரட்டலான இந்த ஃபர்ஸ்ட் லுக், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)