Advertisment

"சார்... இந்த லிப்லாக் அவசியமா?", இயக்குனரிடம் கெஞ்சினேன் - அருண் விஜய்

தனது 25ஆவது படமாக 'செக்கச் சிவந்த வானம்' வெளிவருவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அருண்விஜய். சினிமாவில் அறிமுகமாகி முதல் வெற்றியைப் பெற மிகுந்த தாமதமானது. கடுமையான தொடர் முயற்சிக்குப் பின் தனக்கான இடத்தையும் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார் அருண் விஜய். 'செக்கச் சிவந்த வானம்' குறித்தும் அடுத்த படமான 'தடம்' குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் 'தடம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'லிப்லாக்' காட்சிக்கு மனைவியிடம் அனுமதி வாங்கினீர்களா என்று கேட்டோம். "அட ஏங்க நீங்க வேற..." என்று வெட்கப்பட்டு சிரித்த அருண் விஜய் அதுகுறித்து ஜாலியாகப் பேசியது...

Advertisment

arunvijay

"அந்த சீனை மகிழ் திருமேனி சார் என்கிட்ட சொன்னதும் எனக்கும் அவருக்கும் ஒரு பெரிய வாக்குவாதமே நடந்துச்சு. 'இது கண்டிப்பா வேண்டுமா சார்?'னு கேட்டேன். கதையில் இது ரொம்ப முக்கியமான சீன்னு சொன்னாரு. உங்களுக்கு இது முக்கியமான சீன்தான், ஆனா அதுக்கு அப்பறம் வீட்ல நான்தான் சார் மாட்டிக்கிட்டு முழிக்கணும். அதுமட்டும் இல்லாம நான் இதுவரைக்கும் அந்த மாதிரி நடிச்சதும் இல்லை, நடிக்கவும் கூடாதுன்னு இருக்கேன்னு சொன்னேன். அதுக்கு அவரு, 'நீங்க ஒரு நடிகர், இப்படியெல்லாம் சொல்லலாமா?'னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடைசி வரைக்கும் விடல... அதுக்கு அப்பறம் ஷூட் பண்ணும்போது, ஒருத்தன் கேமரா வச்சிட்டு மேக்கிங் வீடியோ எடுக்க ரெடியா நிக்கறான், 'யோவ் இதுக்கெல்லாம் எதுக்குயா மேக்கிங்... அப்படி போங்கயா'னு சொல்லி அதுக்கு அப்புறம்தான் ஷூட் பண்ணோம். ஆனா, அந்த சீன் படத்தில் ரொம்ப முக்கியமான இடத்தில் வரும். இந்த மாதிரி சீன்லாம் எடுக்கறதுல மகிழ் கில்லாடி. அதையும் சும்மா சொல்லக்கூடாது, அவ்வளவு அழகா, விரசமில்லாம ரொமாண்ட்டிக்கா எடுத்து இருப்பார்.

எம்.ஜி.ஆர் மடியில் உட்கார்ந்த தருணம்,அஜித் ரசிகர்கள் தந்தது, மணிரத்தினம் செட்டில்சிம்பு எப்படி நடந்துகொண்டார்... இன்னும் பல சுவாரசியமான, ஜாலியான விஷயங்களை வீடியோவில் காணுங்கள்...

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/267sv_-DboI.jpg?itok=b28jfJfL","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe