Advertisment

கனத்த இதயத்துடன் பாலா குறித்து அருண் விஜய் பதிவு

arun vijay about bala regards vanangaan movie

பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படம் கடந்த ஜூலையில் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் அம்மாதத்தில் இப்படம் வெளியாகவில்லை. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தை வெள்ளித்திரையில் பார்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலாவுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக ‘எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா’ என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

Advertisment

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இப்படத்தில் முதலில் சூர்யா நடித்து பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

bala arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe