Published on 26/03/2020 | Edited on 26/03/2020
கனா படம் மூலம் தமிழ் சினிமாவை தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட அருண்ராஜா காமராஜ் விஜய்யின் 65 வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்த நிலையில் அருண்ராஜா அடுத்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. போனி கபூர், எச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.