arun matheshwaran shared a photo in twitter with ilayar

‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். கடைசியாக இவரது இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்பு மீண்டும் தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோ பிக்கை இவர் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை கனெக்ட் மீடியா, பி.கே.பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் ஆகிய தயாரிப்பு நிறுனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

Advertisment

இப்படத்தின் பூஜை கடந்த மார்ச் 20ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இளையராஜா, கமல்ஹாசன், தனுஷ், அருண்மாதேஸ்வரன், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டனர். மேலும் இளையராஜா உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ‘இளையராஜா’படக்குழு, இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. இந்நிலையில் அருண்மாதேஸ்வரன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “இசை (இளையராஜா) ஓர் அற்புதம்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.