Advertisment

ஒரே நாளில் இரண்டு பட அப்டேட்டை வெளியிட்ட அருள்நிதி

arulnithi's 'd block' movie release date announced

Advertisment

தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து 'தேஜாவு', 'டைரி', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அரவிந்த் சிங் தயாரிப்பில் உருவாகும் 'டி-ப்ளாக்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை எருமசாணி யூ-ட்யூப் சேனல் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரான் ரத்தன் யோகான் என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் 'டி ப்ளாக்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ஜூலை 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் வெளியிடுகிறது.

'டி-ப்ளாக்' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் இன்று மதியம் 'தேஜாவு' படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்தது. ஒரே நாளில் அருள்நிதியின் இரண்டு படங்களின் அப்டேட் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

arulnithi d block movie
இதையும் படியுங்கள்
Subscribe