arulnithi udhayanidhi photo viral on internet

உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இன்று (24.05.2023) சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணன் - தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவும்அவர்களதுபாசப்பிணைப்பை கொண்டாடும் வகையிலும்இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பலரும் தங்களது அண்ணன் - தம்பி உறவுகளைபோற்றும் விதமாகச் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நடிகர் அருள்நிதி தனது அண்ணனான உதயநிதிக்குசகோதரர்கள் தின வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தைப் பார்க்கையில், நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அருள்நிதிதற்போது'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 26 ஆம்தேதி வெளியாகிறது. மேலும் 'டிமான்டி காலனி 2' படத்திலும்நடித்து வருகிறார். உதயநிதி தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகி வரும் 'மாமன்னன்' படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

Advertisment