அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் தேஜாவு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், மதுபாலா அச்சுத குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரித்துள்ள இப்படத்தினை PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசரை அருள்நிதியின் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வித்தியாசமான க்ரைம் தில்லர் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளஇப்படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.