arulnithi

மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருள்நிதி. தற்போது நிறைய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் பெயரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. அதுவும் அந்தப் படத்தின் பெயரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் புதுமுக இயக்குனரான இன்னிசை பாண்டியன் இயக்கும் இந்தப் படத்திற்கு 'டைரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. அருள்நிதியின் 14ஆவது படம் இதுவாகும். 5 ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

க்ரைம் த்ரில்லர் ஜானராக உருவாகும் இப்படத்திற்கு ரான் எத்தன் இசையமைத்துள்ளார்.

Advertisment