Advertisment

பாரதிராஜாவுடன் இணைந்து நடிக்கும் அருள்நிதி

arulnithi next movie title Thiruvin Kural

தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி கடைசியாக 'டைரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போதுஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க படத்திற்கு 'திருவின் குரல்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அருள்நிதியுடன் இணைந்து பாரதிராஜாவும் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஆத்மிகா நடிக்கிறார்.சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

'லைகா புரொடக்‌ஷன்ஸ்', தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' கமலின் 'இந்தியன் 2' மற்றும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் 62வது படம் உள்ளிட்ட படங்களைத்தயாரிக்கிறது. மேலும் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

lyca Bharathi Raja arulnithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe