Advertisment

"இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" - வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்த அருள்நிதி

arulnithi movie 'dejavu' movie trailer released by udhayanithi

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதியும் ஒருவர். அந்த வகையில் 'டைரி' படத்தில் நடிக்கிறார் . இதனிடையே அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகும் 'தேஜாவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வைட் கார்பெட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'பிஜி மீடியா ஒர்க்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்க முடியாத ஒரு வித்தியாசமான வழக்கை அருள்நிதி கையில் எடுக்கிறார். அந்த வழக்கை அருள்நிதி எப்படி கையாண்டார் என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லராக சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படம் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

arulnithi trailer. Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe