/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/458_6.jpg)
தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் 'டைரி' படத்தில் நடித்துள்ளார். '5 ஸ்டார் க்ரியேஷன்ஸ்' சார்பாக கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரான் எத்தன் யோஹன் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்நிலையில் 'டைரி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காவல் துறை அதிகாரியாக வரும் அருள்நிதி ஆதாரம் இல்லாமல் முடங்கி கிடக்கும் ஒரு வழக்கை கையில் எடுக்கிறார். அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)