/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_47.jpg)
நடிகரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக், ‘கண்ணை நம்பாதே’, ‘ஏஞ்சல்’ உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
இயக்குநர் பாலா இயக்கும் படத்திலும் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை பாலா கூறியவுடன், உதயநிதி ஸ்டாலின் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி - பாலா படத்தில் நடிகர் அருள்நிதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. உதயநிதியும் அருள்நிதியும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)