Advertisment

'இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியாதான் இருக்கும்' - நம்பர் 1 இடத்தில் 'தி லெஜண்ட்'

arul saravanan's 'the legend' movie get no.1 in trending

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரிஇயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் ஆக்ஷன், காமெடி, காதல், எமோஷன் கலந்து பக்காவான கமர்ஷியல் பாணியில் உள்ளது. யூட்யூப்-இல் வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை 3.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

arul saravanan harris jayaraj the legend
இதையும் படியுங்கள்
Subscribe