Advertisment

ரசிகர் மன்றத்திற்கு ஆள் சேர்க்கும் சரவணா ஸ்டோர்ஸ் அருள்! 

விளம்பரங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை சம்பாதித்திருப்பவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் அருண் சரவணன். இவர் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கடந்த சில வருடங்களாக சொல்லப்பட்டு வந்தநிலையில் சமீபத்தில்தான் இவர் நடிக்கும் படத்திற்கான பூஜை போடப்பட்டது.

Advertisment

saravanan stores

அந்த படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரு இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதில் அருண் சரவணனுக்கு ஜோடியாக நட்நிகை கீர்த்திகா திவாரி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

Advertisment

தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏவிஎம் ஸ்டுடியோவில் சமீபத்தில் துவங்கியது. 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

சினிமாவிற்குள் நுழைந்தவுடனேயே அருண் சரவணனுக்கு ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக தமிழ்வேந்தன் என்பவர் பதவி வகிக்கிறார். மேலும் இந்த ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட எண்ணை அணுகுமாறும் சென்னையில் ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

arul saravanan saravana store
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe