சீமான் சிலாகித்த பாடல்!

article 41

ஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தயாரிப்பில், எஸ். ஜி. சிவகுமார் இயக்கத்தில், பாலுசே,சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்டிகல் 41'. இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைத்துள்ளார்.

அரசாங்க வேலைக்காக கடன் வாங்கி பணத்தை கட்டும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில், சம காலத்திய சமூக அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக இடம் பெற்றுள்ள 'சர்க்காரு வேலதான்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/g6aYkBcdOeE.jpg?itok=A7KFxTxF","video_url":" Video (Responsive, autoplaying)."]}

seeman
இதையும் படியுங்கள்
Subscribe