/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/article-15-remake.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆர்டிகிள் 15. இதை பிரபல இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கினார்.
மேலும், இதில் நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தபடத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றெல்லாம் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீர் ஸ்டூடியோஸ் வெளியிடும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)