style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான 'தொண்டன்' படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அர்த்தனா பினு. இவர் தற்போது செம, கடை குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 படத்தில் நடித்து வருகிறார். இதை இவர் நடித்த செம படம் வரும் 25ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். பின்னர் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அழுததற்கான காரணம் குறித்து நடிகை அர்த்தனா பேசியபோது.... "படப்பிடிப்பில் இயக்குனரோ, தயாரிப்பாளரோ எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்" என்று விளக்கமளித்தார்.