Advertisment

வாரிசு பட பிரபலம் மறைவு - இயக்குநர் வம்சி இரங்கல்

art director Sunil Babu passed away

Advertisment

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும்மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள சுனில் பாபு நேற்று (05.01.2023) இரவு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 50. மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளார்எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்காலில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்துஎர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சுனில் பாபுவுக்கு பிரேமா என்ற மனைவியும் ஆர்யா சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், சுனில் பாபு மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் தங்களது இரங்கலைசமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் துல்கர் சல்மான், "சுனில் பாபு மறைவு வேதனை அளிக்கிறது. மிகவும் ஆர்வத்துடன் அமைதியாக தனது வேலையைச்செய்பவர். தனது மகத்தான திறமையைப் பற்றி சத்தம் போடாதமனிதர். நினைவுகளுக்கு நன்றி சுனில் பாபு" எனத்தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுனில் பாபு பணியாற்றிய 'சீதா ராமம்’, ‘ஆபரேஷன் ரோமியோ’, ‘பீஷ்ம பர்வம்’, ‘மகரிஷி’, உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் 'கஜினி', 'துப்பாக்கி' உள்ளிட்ட பல படங்களில்கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இது போக வரும் பொங்கலை முன்னிட்டு 11 ஆம் தேதி வெளியாகவுள்ள விஜய்யின் 'வாரிசு' படம்தான் சுனில் பாபுபணியாற்றிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனால் இவரதுமறைவுக்கு வாரிசு படக்குழுவும் இயக்குநர் வம்சியும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இயக்குநர்வம்சி, "வெற்றிடத்தை விட்டுச் சென்றீர்கள் சுனில் சார். நீங்கள் ஒரு சகோதரனாக இருந்துள்ளீர்கள். மௌனமாக மறைந்தீர்கள்.எப்போதும் நீங்கள் வடிவமைத்த ஒவ்வொரு படத்திலும் உயிர்மூச்சாய் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vamshi Paidipally varisu movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe