Skip to main content

வாரிசு பட பிரபலம் மறைவு - இயக்குநர் வம்சி இரங்கல்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

art director Sunil Babu passed away

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள சுனில் பாபு நேற்று (05.01.2023) இரவு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 50. மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் காலில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சுனில் பாபுவுக்கு பிரேமா என்ற மனைவியும் ஆர்யா சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

 

இந்த நிலையில், சுனில் பாபு மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் துல்கர் சல்மான், "சுனில் பாபு மறைவு வேதனை அளிக்கிறது. மிகவும் ஆர்வத்துடன் அமைதியாக தனது வேலையைச் செய்பவர். தனது மகத்தான திறமையைப் பற்றி சத்தம் போடாத மனிதர். நினைவுகளுக்கு நன்றி சுனில் பாபு" எனத் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

சுனில் பாபு பணியாற்றிய 'சீதா ராமம்’, ‘ஆபரேஷன் ரோமியோ’, ‘பீஷ்ம பர்வம்’, ‘மகரிஷி’, உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் 'கஜினி', 'துப்பாக்கி' உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இது போக வரும் பொங்கலை முன்னிட்டு 11 ஆம் தேதி வெளியாகவுள்ள விஜய்யின் 'வாரிசு' படம்தான் சுனில் பாபு பணியாற்றிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

இதனால் இவரது மறைவுக்கு வாரிசு படக்குழுவும் இயக்குநர் வம்சியும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் வம்சி, "வெற்றிடத்தை விட்டுச் சென்றீர்கள் சுனில் சார். நீங்கள் ஒரு சகோதரனாக இருந்துள்ளீர்கள். மௌனமாக மறைந்தீர்கள். எப்போதும் நீங்கள் வடிவமைத்த ஒவ்வொரு படத்திலும் உயிர்மூச்சாய் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதெல்லாம் இல்லை... இதேதான் அடிச்ச நீ” - விஜய் வீடியோ வைரல்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
vijay video viral on social media

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (Greatest of All Time) என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் விவேக் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, வாரிசு பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பேட் செய்யும் விவேக்கை கைதட்டி ஊக்கப்படுத்துகிறார். அவர் தூக்கி பவுண்டரி லைனில் பாலை அடிக்க, அது ஃபோர் என்று எதிரணியினர் சொல்கின்றனர். உடனே, “நீ அடிச்சா சிக்ஸா... சிக்ஸு சிக்ஸு... அதெல்லாம் இல்லை... இதேதான் அடிச்ச நீ” என ஜாலியாக வாதாடுகிறார். இதில் ராஷ்மிகா, யோகி பாபு, இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'வாரிசு'. தில்ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் விவேக் தான் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

அதிகாலை காட்சி விவகாரம் - தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

rohini theatre varisu thunivu morning shoe issue update

 

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் வெளியானது. இத்திரைப்படம் சென்னை ரோகிணி திரையரங்கில் கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை காட்சி திரையிடப்பட்டதாகக் கூறி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் சென்னை மாநகரக் காவல் ஆணையர். 

 

இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி திரையரங்கு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளை 24 மணி நேரமும் திரையிட முடியும் என்கிற அடிப்படையிலேயே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில், கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளைத் திரையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்  ரோகிணி திரையரங்கு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.