Advertisment

தமிழ் சினிமாவின் புகழ்ப்பெற்ற கலைஞர் காலமானார்...

p k

பிரபல கலை இயக்குனர் மற்றும் உடை வடிவமைப்பாளரான பி. கிருஷ்ணமூர்த்தி நேற்று அவருடைய இல்லத்தில் காலமானார்.

Advertisment

தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 55 படங்களில் கலை இயக்குனராகவும் உடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.பாரதிராஜாவின் நாடோடி தென்றல், பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படங்களினால் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி, ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். அதில் மூன்று கலை இயக்கத்திற்கும், இரண்டு உடை வடிவமைப்புக்கும் பெற்றிருக்கிறார்.

Advertisment

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, 2009ஆம் ஆண்டு வெளியான ‘நான் கடவுள்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்ததற்காக மாநில விருதுகளை வென்றார்.அவருடைய மடிப்பாக்கம் இல்லத்தில் இன்று இறுதி அஞ்சலி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe