Advertisment

தற்கொலை செய்து கொண்ட தேசிய விருது பெற்ற பிரபலம் - திரையுலகினர் அதிர்ச்சி

art director Nitin Desai passed away

பாலிவுட்டில் சலாம் பாம்பே, தேவ்தாஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். மேலும் தயாரிப்பு மேற்பார்வையாளராக லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார்.

Advertisment

அதோடு 'ஹெலோ ஜெய் ஹிந்த்', 'அஜிந்தா' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் பணியாற்றிய சலாம் பாம்பே, லகான் உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. சிறந்த கலை இயக்குநராக 4 முறை தேசிய விருது வாங்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தைபோலீசார் இன்னும் தெரிவிக்காத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது ஸ்டூடியோ சரியாக இயங்கவில்லை என்றும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்,அவர்இறந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தற்போது இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர்.

passed away Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe