Art director Nitin Desai case update

பாலிவுட்டின்பிரபல கலை இயக்குநரும் 4 முறை தேசிய விருது வாங்கிய நிதின் சந்திரகாந்த் தேசாய், கடந்த 2 ஆம் தேதி மகாராஷ்டிரா, கர்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது பாலிவுட் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisment

அவர் தற்கொலைக்கு அவரது ஸ்டூடியோ சரியாக இயங்கவில்லை என்றும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த தற்கொலை வழக்கு விசாரணையில், நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பாக அவர் அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜ் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த வாய்ஸ் மெசேஜ்ஜில், தனது தற்கொலைக்கு காரணமாக நிதின் தேசாய் நான்கு பேர்களின் பெயர்களைக் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியானது.

Advertisment

இதையடுத்து தற்கொலை வழக்கு சம்பந்தமாக நிதின் தேசாய் மனைவி நேஹா நிதின் தேசாய், ஈசிஎல் என்ற நிதி நிறுவனத்தைச் சார்ந்த 5 ஊழியர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், தனது கணவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு நிறுவனத்தின் அதிகாரிகளே காரணம். கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் தனது கணவரை கடன் கேட்டு துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகாரின் பேரில்ராய்காட் போலீசார், எடெல்வீஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் மேலும்ஐந்து பேர் மீது தற்கொலைக்குத்தூண்டுதல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 306 மற்றும் 34 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே அவரது மறைவு குறித்துப் பேசிய அமீர் கான், "அவரது மரணம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். அதற்கு பதில் அவர் யாருடைய உதவியையாவது நாடியிருக்கலாம். என்ன செய்வது... அது மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் நாம் என்ன சொல்ல முடியும். திறமையான ஒருவரை இழந்துவிட்டோம்" என வருத்தத்துடன் பேசியிருந்தார்.