Art director millan passed away

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் கலை இயக்குநர் மிலன், இன்று மாரடைப்பால் காலமானார்.

Advertisment

2006ம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமான மிலன், அஜித் நடிப்பில் வெளியான, பில்லா, வேதாளம், வீரம், துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர்.

Advertisment

தற்போது அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பாக அஜர்பைஜான் நாட்டிற்கு படக்குழுவினர் சென்று அங்கு பணிகளை துவக்கியிருந்தனர்.

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக கலை இயக்குநர் மிலன் காலமானார். தற்போது நடிகர் அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் மிலன் உடல் வைக்கப்பட்டிருக்கும் அசர்பைஜான் நாட்டு மருத்துவமனையில் இருக்கின்றனர். இவரது உடல் சென்னைக்கு கொண்டு வர இரண்டு, மூன்று தினங்கள் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

Advertisment