Advertisment

”பரியேறும் பெருமாளை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்காததற்கு இதுதான் காரணம்” - கலை இயக்குநர் ராமலிங்கம் 

Art Dir Ramalingam

"வடசென்னை என்பது பழமையை உள்வாங்கிய இடமாக உள்ளது. இன்றைக்குஅங்குசென்று பார்த்தாலும் பல விஷயங்கள் பழமை மாறாமல் உள்ளன. அதனால் வடசென்னை மீதுஎனக்குகாதல் அதிகம்.சார்பட்டாபரம்பரைபடத்திற்குகலை இயக்கம் செய்தது பெரிய அனுபவமாக இருந்தது.

Advertisment

சமூக மாற்றத்திற்கான படங்களையும் சாதிய படங்களையும் ஒரே நேர்கோட்டில்வைத்துபார்க்கிறார்கள். பா.ரஞ்சித் எடுக்கும் படங்கள் சமூக மாற்றத்திற்கான படங்கள். எந்த இடத்திலும் என்னுடைய சாதி உயர்ந்த சாதி என்று ரஞ்சித் காட்டியதே இல்லை. என்னை ஏன் இப்படிபண்ணுற, நான் இப்படித்தான் இருப்பேன், என்னை என்னுடைய போக்கிலேயே விட்டுவிடு என்று படம் எடுத்தால்அதைத்தவறு என்கிறார்கள்.

Advertisment

நான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்று சொன்னால் அதைத் திமிராகச்சொல்வதாகசொல்கிறார்கள். நீஅவனைகால் மேல் கால் போடாதே என்று சொல்வதால்தான் அவன் கால் போடுவேன் என்கிறான். அவன் கால், அவன்எங்கேயும்போட்டுக்கொள்கிறான், அதில் உனக்கு என்ன பிரச்சனை வருகிறது?

எனவே இந்த மாதிரியான படைப்புகளை சமூக மாற்றத்திற்கான படமாகத்தான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளி மாதிரி இருப்பவர்கள்கூட ரஞ்சித்சாதிப்படம்எடுப்பதாகச் சொல்கிறார்கள். மாரி செல்வராஜ் எடுத்தபரியேறும்பெருமாள் படத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.அதற்குகாரணம் என்னிடம்சொல்வதைக்கூடதன்மையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்" என்றார்.

karnan pariyerumperumal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe