
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கற்றார் (KATRAAR) என்ற பெயரில் புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும்; அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குமாறு பயன்படும்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்தியேகப் படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.