Advertisment

கார் விபத்தில் சிக்கிய அர்னால்ட்

Arnold Schwarzenegger involved car accident

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பிரெண்ட்வுட்டில் வசித்து வருகிறார். இவர்கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகஇருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இவர் நேற்று (21.1.2022) தனதுவீட்டில் இருந்து சொகுசுக்காரில் வெளியே சென்றுள்ளார். அங்கிருந்து அரைமைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இடதுபுறமாகத் திரும்பியுள்ளார். ஆனால் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் சிக்னல் விழுவதற்கு முன்பே காரைத் திரும்பியதால், எதிரே வந்த சிவப்பு நிற பியர்ஸ் கார் மீது அர்னால்டின் கார் மோதியது. இந்த விபத்தில் பியர்ஸ் காரை ஓட்டி வந்தபெண் படுகாயம் அடைந்தார். இதனையடுத்துஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அதிஷ்டவசமாக நடிகர் அர்னால்ட் எந்தவிதக் காயமின்றி தப்பித்துள்ளார். இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர், சினிமாவில் சண்டைக் காட்சிகள் பார்ப்பது போல் இருந்ததாகக் கூறியுள்ளார்.

Advertisment

hollywood arnold schwarzenegger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe