Armed security for Kangana Ranaut in chandramukhi 2 shoot

Advertisment

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத் அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். பாலிவுட்டில் திரையுலகினரின் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறி வரும் கங்கனா, மோடி பிரதமராகப் பதவி ஏற்றதிலிருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கும், மோடிக்கும் ஆதரவாக கருத்துக்களைத்தெரிவித்து வருகிறார்.

தொடர்ந்து கங்கனா ரணாவத்கூறும் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி வருவதால் அவருக்குஅச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கங்கனா ரணாவத் வெளியில் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கங்கனா ரணாவத்தற்போது பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். அப்படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பாகத்துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்து வருகிறார்களாம். இதன் காரணமாகப் படப்பிடிப்பு தளத்தில் சற்றுபரபரப்பு நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது.