/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nnn.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அறிமுக இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கி விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தமிழில் 'வர்மா' என்ற பெயரில் இப்படத்தை ரிமேக் செய்து இயக்கி வருகிறார் இயக்குனர் பாலா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யவுள்ளனர். ஹிந்தியில் 'கபிர் சிங்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்க, எம்.எஸ் தோணி படத்தின் நாயகி கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முசூரி, டெல்லி, மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கின்றன. மேலும் படம் வரும் 21 ஜூன் 2019 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)