
கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தமிழ், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கினார். பாலிவுட்டில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இந்நிலையில் இப்படம் தெலுங்கில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸானது. ரிலீஸாகி மூன்று வருடங்களை கடந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
5ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது இப்படத்தின் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் அடங்கிய நீண்ட வெர்சன் வெளியிடப்படும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். முதன் முதலில் இப்படம் 4 மணி நேரம் 20 நிமிடங்களாக இருந்தது. அதை பிறகு 3 மணி நேரம் 45 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. பின்னர், இதையும் குறைந்து 3 மணி நேரமாக குறைத்து திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த 3 மணி நேரம் 45 நிமிடங்கள் பதிப்பில் அர்ஜுன் ரெட்டியின் குழந்தை பருவம், நாயுடனான அவரது நட்பு உள்ளிட்ட பல காட்சிகள் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.