Advertisment

அர்ஜூன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம் இவருடனா? 

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. அதன்பின் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அர்ஜூன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கினார். இந்த படம் தெலுங்கில் எப்படி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்ததோ அதேபோல ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான இந்தி ரீமேக்கான கபீர் சிங்கும் ஹிட் அடித்தது.

Advertisment

sandeep

இதன்பின் சந்தீப் ரெட்டி வங்கா யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெவில் என்ற படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், மகேஷ் பாபுவோ என்னுடைய ரசிகர்களுக்கு நான் இவ்வளவு வில்லத்தனத்துடன் நடித்தால் பிடிக்காது என்று தெரிவித்து அதிலிருந்து விலகிவிட்டாராம். அதன்பின் இந்த கதையை ரன்பீர் கபூரிடம் தெரிவித்துள்ளார். அவர் முதலில் இந்த கதையை கேட்டு பிடித்து, பின்னர் எனக்கு செட்டாகாது என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் சாஹோ தோல்விக்கு பின் ஜான் என்ற படத்தில் நடித்து வரும் பிரபாஸ் இந்த கதையை கேட்டு இதில் நடிக்க ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

prabhas sandeep reddy vanga
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe