ADVERTISEMENT

என்கவுண்டரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்...

12:28 PM Dec 07, 2019 | santhoshkumar

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், நேற்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், "பெண் மருத்துவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை நடித்துக்காட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் சிறப்புப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் ஒரு போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்ததும் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார். இந்த என்கவுண்டரை பலரும் கொண்டாடி வருகின்றனர். சிலர் காவல்துறையே நீதியை கையில் எடுத்துக்கொள்ள கூடாது. அது ஒரு மனித உரிமை மீறல் செயல் என்று என்கவுண்டர் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி புகழ் ராகுல் ராமகிருஷ்ணா இதுகுறித்து தெரிவிக்கையில், “இது நீதியல்ல. சமாளிக்க முடியாத பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க வைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வடிவம். குற்றம் நடக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமாகத்தான் நீதி கிடைக்கும்.

இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் எவ்வளவு தைரியமாக காவல் துறையால் செயல்பட முடிகிறது என்பதைக் கவனிக்க இது நல்ல நேரம். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு குறைவான மதிப்பு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள நல்ல நேரம்” என்று கடுமையாக காவல்துறையின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT