இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் அர்ஜுன் கபூர்.
அந்த பதிவில், "எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரிடமும் தெரிவிப்பது என் கடமை. நான் நன்றாக இருக்கிறேன். எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி நான் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாட்களில் என் உடல்நிலை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். இவை கணிக்க இயலாத தனித்துவமான நாட்கள். மனிதம் இந்த வைரஸை வீழ்த்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.