arjun

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சமீபத்தில் #meetoo சர்ச்சையில் சிக்கிய நடிகர் அர்ஜூன் தமிழில் தற்போது நடித்து வரும் படம் "இருவர் ஒப்பந்தம்". சமீர் தயாரித்து இயக்கி வரும் இப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் 'கான்ட்ராக்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சோனி செரிஸ்டா 'மீடூ' வில் சிக்கிய நடிகர் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து பேசும்போது... "அர்ஜுன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே அவர் ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவர் அவ்வளவு நாகரீகமாகவும், ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது. என்றார்.