பிரபல நடிகர் அர்ஜூன் தயாரித்து இயக்கும் படம் ‘சீதா பயணம்’. இப்படத்தில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக நிரஞ்சன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு - தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அபி கதாபாத்திரத்தில் நிரஞ்சனும் சீதா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.