Advertisment

"மோகன்லாலை இயக்கவுள்ளேன்" - அர்ஜுன் அறிவிப்பு

arjun to direct mohanlal

Advertisment

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அர்ஜுன். இப்போது விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்து வருகிறார். அதோடு மேலும்சில படங்களில் கவனம் செலுத்தி வரும் அர்ஜுன் நடிப்பது மட்டுமல்லால் இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

அந்த வகையில் 'மார்ட்டின்' என்ற படத்தில் கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் விரைவில் மோகன்லாலை வைத்து படமெடுக்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோகன்லாலிடம் முன்னதாகவே சந்தித்துப் பேசியுள்ளதாகவும் நிச்சயம் இப்படம் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் இப்படம் இப்போதைக்கு ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு வெளியான 'மரைக்காயர்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்துஅர்ஜுன் நடித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் தற்போது ரஜினியின் 'ஜெயிலர்', லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்', தான் முதன் முதலாக இயக்கவுள்ள 'பரோஸ்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

arjun mohanlal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe