Advertisment

“மாஸ்டர் ட்ரைலரை 6 முறை பார்த்துவிட்டேன்”- நடிகர் அர்ஜூன் தாஸ்!

arjun dass

கரோனா பாதிப்பு, தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் வெளியாக இருந்த விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த 'மாஸ்டர்' படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புகள் குறைந்து, திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி தந்த பின்னரே இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அதற்கு முன்னதாக ஓ.டி.டி.யில் படம் ரிலீஸாகாது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

Advertisment

இதனிடையே, இப்படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தின் டீஸர், ட்ரைலர் என்று ஏதாவதுரசிகர்களைக் கவர வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் நேற்று இன்ஸ்டாகிராமில் லைவ் வந்திருந்தார். அப்போது ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த அர்ஜூன், மாஸ்டர் படத்தின் ட்ரைலர் பார்த்தாச்சா என்கிற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில், "மாஸ்டர் ட்ரைலரை இதுவரை 6 முறை பார்த்துவிட்டேன். தளபதி பேசும் அந்த ஒரு டயலாக் வரும்பொழுது மக்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். காத்திருந்தாலும் அதற்கேற்ற பலனை மாஸ்டர் டிரெய்லர் கொடுக்கும். படம் ரிலீஸுக்கு முன்பாக ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும். சரியான நேரத்தில் படக்குழு அதனை ரிலீஸ் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

arjun dass master
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe