இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அர்ஜுன் தாஸ், அடுத்ததாக அந்தகாரம், மாஸ்டர்ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படங்களின் கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து புத்தம் புது காலை விடியாதா என்ற அந்தாலஜி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 14ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகர் சூர்யா அர்ஜுன் தாஸ் பெற்றோரை நேரில் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ்சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்னை போலவே என் பெற்றோர்களும் உங்களின்தீவிர ரசிகர்கள். உங்களை சந்தித்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் என்னை பற்றி தெரியும் எனவும், நான் நல்லா இருக்க வேண்டும் என நீங்கள் கூறியதும்என் பெற்றோர்களை பெருமையாக உணர வைத்துள்ளது. எனது பெற்றோரை முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.