/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1128.jpg)
கடந்த 2019 ஆம் ஆண்டுலோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில்பிரபலமான அர்ஜுன்தாஸ், அடுத்துமாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன்தாஸ்பாலிவுட்டில்என்ட்ரிகொடுக்க உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர்லிஜோஜோஸ்இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலிடைரீஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும்வரவேற்பைபெற்றது. மலையாளத்தில் கிடைத்தவெற்றியைதொடர்ந்துஇப்படத்தைபிற மொழிகளில்ரீமேக்செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் இந்தியில்ரீமேக்செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் அர்ஜுன்தாஸ்முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கஉள்ளதாககூறப்படுகிறது. மேலும் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியானசூரரைப்போற்று படத்தின் இந்திரீமேக்கிலும்அர்ஜுன்தாஸ்ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகசினிமாவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)