/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Et_-sZPVcAQzpTT.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது குறித்தான அறிவிப்பை நேற்று (11.02.2021) வெளியிட்ட வசந்தபாலன், இது தன்னுடைய 25 வருடக் கனவு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் இயக்கவிருக்கும் இப்படத்தில், ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)