ADVERTISEMENT

"தூரத்திலிருந்தாவது பார்க்கலாம் என்ற நம்பிக்கையில்" - கமலை சந்தித்த அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி!

04:16 PM Nov 28, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அர்ஜுன் தாஸ் நடிப்பில், அட்லீ தயாரிப்பில் உருவான படம் 'அந்தகாரம்'. இப்படம் கடந்த 24 ஆம் தேதி, நெட்ஃப்லிக்ஸில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்திற்காக, இப்படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இந்தநிலையில், திரை ஜாம்பவான் கமல்ஹாசனை அர்ஜுன் தாஸ், அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ, உள்ளிட்ட 'அந்தகாரம்' படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். கமல்ஹாசனை சந்தித்த புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அட்லீ, "அந்தகாரம் படக்குழு கமல்ஹாசன் அவர்களிடம் ஆசி பெற்றுள்ளது. எப்போதும் எங்களோடு இருப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் நன்றி. உங்களின் (கமல்) வார்த்தைகள், எப்போதும் எதாவது ஒன்றை புதிதாகச் செய்வதற்கு எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. லவ் யூ சார்" எனக் கூறியுள்ளார்.

அட்லீயோடு கமல்ஹாசனை சந்தித்த அர்ஜுன் தாஸ், இந்த நாளை என்றும் மறக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பதிவில், "நான் நடிகராக விரும்பியதற்கு கமல்ஹாசன் அவர்களும் ஒரு காரணம். அவரை தூரத்திலிருந்து சிறிதளவாவது பார்க்கலாம் என்ற நம்பிக்கையில், பலமுறை அவரின் அலுவலகம் வழியே சென்றதிலிருந்து, இன்று அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளேன். இந்தநாளை என்றும் மறக்கமாட்டேன்" எனக் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT