நடிகர் அர்ஜுன் தாஸ், கடைசியாக வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படமான ஒஜி படத்தில் நடிக்கிறார். இதுவரையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த அர்ஜுன் தாஸ் தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
'ஜூன்', 'மதுரம்' படங்கள் மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ வெப் சீரிஸ் இயக்கிய அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'ஹிருதயம்', குஷி, ஹாய் நானா ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.