Advertisment

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி: ‘லைஃப் டைம் செட்டிலா?’

arjun das Aishwarya Lekshmi photos goes viral on internet

Advertisment

தமிழில் விஷாலின் 'ஆக்‌ஷன்' படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி 'ஜகமே தந்திரம்', 'பொன்னியின் செல்வன்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரதுநடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. இதனைத்தொடர்ந்து 'கிறிஸ்டோபர்', 'கிங் ஆஃப் கோதா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகர் அர்ஜுன் தாஸுடன்இருக்கும் புகைப்படத்தைஹார்ட் எமோஜியுடன்பகிர்ந்துள்ளார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களாஎன்றகேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மறுபுறம்இருவரும் இணைந்து ஏதேனும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்களா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், பெரும்பாலானோர் இருவரும் காதலித்து வருவதாகக் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

aishwarya lekshmi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe