அர்ஜுனுடன் இணையும் விக்ரம்பிரபு 

vikram prabhu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தயாரிப்பில் சத்யசிவா இயக்கிவரும் கழுகு 2 படம் வேகமாக வளர்ந்து வருகிறது. கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடிக்கும் இப்படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் அடுத்ததாக அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகவுள்ள 'வால்டர்' என்ற படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி புதுமுக இயக்குனர் அன்பரசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக 'வால்டர்' படம் உருவாகிறது.

vikram prabhu
இதையும் படியுங்கள்
Subscribe