Advertisment

“இவரைப்போல யாராலும் சாதிக்க முடியாது...” -எஸ்.பி.பி குறித்து அர்ஜுன் புகழாரம்! 

arjun

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

கடந்த வாரத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் வெண்டிலேட்டர் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தினசரி அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு தெரிவித்து வருகிறார். மருத்துவ நிர்வாகமும் உடல்நிலை குறித்து அவ்வப்போவது அறிக்கை வெளியிட்டது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொற்று காரணமாக எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம், தொடர்ந்துசெயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விழிப்புடன், சொல்வதைப் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார். தொடர்ந்து எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் எஸ்.பி.பி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இனிமேல் ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரைப் போல் யாரும் சாதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே யாரும் சாதிக்க முடியாது. அவர்தான் நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிரார்த்தனையை விட எதுவும் சிறந்தது கிடையாது. தற்போது இவருக்காக கோடிக்கணக்கான பேர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் உடல் நலம்பெற்று ஆரோக்கியத்துடன் அவர் வருவார் என்று நானும் வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும் நீங்கள் ஒரு போராளி என்று. உங்களுடைய புதிய பாட்டை கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Advertisment

arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe