இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு 'அருண் விஜய் 31' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி என முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இத்தகவலை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
It's a wrap?
What a wonderful experience and beautiful memories working with this team! It's always a pleasure working with u @dirarivazhagan sir! Thanks to @All_In_Pictures Vijay, @DopRajasekarB@ReginaCassandra@StefyPatel, & my entire team! Can't wait to watch the output! pic.twitter.com/w0gYVqClqG
— ArunVijay (@arunvijayno1) January 10, 2021
'குற்றம் 23' படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய்யுடன் இணைந்துள்ளது இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.