Advertisment

'அவரை விஜய் சேதுபதியிடம் இருந்து பிரிக்க முடியாது' - நடிகை அர்ச்சனா

archana

Advertisment

பேஸ்ஸன் ஸ்டூடியோஸ் தயாரித்து, விஜய் சேதுபதி 75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள 'சீதக்காதி' படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அர்ச்சனா விஜய்சேதுபதி குறித்து பேசியபோது...."நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு கிடப்பது 'அய்யா' என்று அழைக்கப்படும் ஒரு மனிதனால்தான். சீதக்காதியில் என் கதாபாத்திரம் மகிழ்ச்சி, துக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளை கொண்ட ஒன்று.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நான் முன்பே சொன்ன மாதிரி அது அய்யா, அவரை விஜய் சேதுபதியிடம் இருந்து பிரித்து பார்க்க முடியவில்லை. இது படப்பிடிப்பின் போது மட்டுமல்ல, படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும் பார்க்கும் போது, இருவரையும் பிரித்து பார்க்க முடியவில்லை. அது எனக்கு மட்டுமல்ல குழுவில் உள்ள அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற ஒரு தனித்துவமான கதையை சிந்திக்க, பாலாஜி தரணீதரனுக்கு எது உந்துதலாக இருந்திருக்கும் என படப்பிடிப்பு முழுக்க நான் ஆச்சர்யப்பட்டேன். சமகால தலைமுறை இயக்குனர்கள் வழக்கமான முறையில் படம் எடுக்க, கவனம் செலுத்தும் நேரத்தில் இவரின் சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நிச்சயமாக, அவர் தான் 'அய்யா'வின் படைப்பாளி. அவரை மக்கள் கொண்டாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

seethakathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe